பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பிய பிரதமர் மோடி
புதுடில்லி: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில் கோவை தொகுதி வேட்பாளர் அண்ணாமலைக்கு எழுதிய கடிதத்தில், “ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவை செய்ய முடிவெடுத்ததற்கு உங்களை வாழ்த்துகிறேன். மக்களின் ஆசியுடன், நீங்கள் நாடாளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.