டாடாநகர்: ஜார்கண்ட் மாநிலம் டாடாநகரில் இருந்து குஜராத்தின் அகமதாபாத்-புஜ் வழித்தடத்தில் நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
‘அகமதாபாத் – புஜ் வந்தே மெட்ரோ’ சேவை முற்றிலும் முன்பதிவு செய்யப்படாத குளிரூட்டப்பட்ட ரயிலாகும். பயணிகள் ரயில் புறப்படுவதற்கு சற்று முன் டிக்கெட் வழங்கும் மையங்களில் இதற்கான டிக்கெட்டுகளை வாங்கலாம்.
சுமார் 1,150 பயணிகள் அமரும் வசதி கொண்ட இந்த ரயிலில் 2,058 பயணிகள் நின்று கொண்டு பயணிக்க முடியும்.
இந்த ரயில் 9 நிலையங்களில் நின்று செல்லும். மணிக்கு 110 கிமீ இந்த ரயில் 360 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இந்த தூரத்தை 5 மணி 45 நிமிடங்களில் கடக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கண்ட ரயில் திட்டங்களுடன் ஆறு வந்தே பாரத் ரயில்களையும் அவர் தொடங்கினார். அதாவது டாடாநகர் – பாட்னா, பாகல்பூர் – தும்கா – ஹவுரா, பிரம்மபூர் – டாடாநகர், கயா – ஹவுரா, தியோஹர் – வாரணாசி, ரூர்கேலா – ஹவுரா வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடம் போன்ற புனித யாத்திரை தலங்களுக்கு விரைவான பயணத்தை வழங்குகிறது. மேலும் ரூ. 660 கோடி மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.