சென்னை: மீன் 65 சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். அதனை வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மீன் – 1 கிலோ
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கார்ன் மாவு – 1/2 கப்
மைதா மாவு – 1/2
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் முட்டை – 2
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் மீனை கழுவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு அதனுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கார்ன்மாவு மற்றும் மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, முட்டை உடைத்து சேர்த்து கலந்து கொள்ளுங்கள். கூடவே அதனுடன் உப்பு சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும். பிறகு ஒரு கடாயில எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்த வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் நாம் ஊற வைத்த மீனை சிறிது சிறிதாக போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மீன் 65 ரெடி.