புதுடில்லி: கண்காணிக்கும் மையம் அமைவிடம்… விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை கண்காணிக்கும் மையம் அமைவிடத்தை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.
சந்திரயான் 3, ஆதித்யா எல்1 திட்டங்களின் வெற்றியைத் தொடர்ந்து, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதில் இஸ்ரோ மும்முரமாக உள்ளது. இந்த திட்டத்தில், விமானப்படை குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிதாப் மற்றும் விங் கமாண்டர் சுபன்சூ சுக்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கு அடுத்த கட்ட பணிகளில் தீவிரம் காட்டிய இஸ்ரோ, அடுத்ததாக இத்திட்டத்திற்கான தற்காலிக தரைகட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய கண்காணிப்பு மையம் எங்கு அமைப்பது என தேடி வந்த நிலையில், தற்போது ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவு தேர்வாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட இந்திய குழுவினர், சரியான இடம் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து , மையம் அமைப்பது குறித்து ஆஸ்திரேலியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.