புதுடில்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல்.. ஆய்வறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதனால் வரும் 2029 தேர்தலில் இத்திட்டம் அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆய்வறிக்கைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அறிக்கையை நடைமுறைப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி ஆகியவற்றிக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு 18,626 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை அண்மையில் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டபடி வரும் 2029-ல் இத்திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும் என தெரிகிறது.