மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், காவிரி டெல்டா பகுதிகளுக்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது.
தமிழகத்துக்குத் தேவையான தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுத்ததே இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணம். இதை சரி செய்ய காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக காவிரி பிரச்சனை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 90 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம், 30 அடியாக சரிந்ததால், டெல்டா பகுதிக்கு நீர்வரத்து தடைபட்டதால், சம்பா சாகுபடி பாதித்தது.
இந்த ஆண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகா தயாராக இல்லை. கர்நாடகாவில் பெய்த கனமழையால் ஜூன், ஜூலை மாதங்களில் அணைகள் நிரம்பியதால் தமிழகத்துக்கு உபரி நீர் திறக்கப்பட்டது.
ஜூலை தொடக்கத்தில் 40 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து டெல்டா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 107.55 அடியாக இருந்தது. நீர் இருப்பு 74.97 டிஎம்சியாக குறைந்தது. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 2997 கன அடியாக குறைந்துள்ள நிலையில் காவிரி டெல்டா பகுதிக்கு 23 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
காவிரியில் கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்பதே டெல்டா விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்பு.