சென்னை: “நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் உள்துறை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.
நீட் தேர்வில் தமிழகம் மட்டும் ஏன் விலக்கு கோருகிறது என்பது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் 4-வது முறையாக கடிதம் எழுதியுள்ளது.
மத்திய அரசு கேட்ட கேள்விகளுக்கு தமிழக அரசு உரிய பதில் கடிதம் அனுப்பியுள்ளது. நீட் தேர்வு தேவையில்லாமல் தமிழகம் சிறந்த மருத்துவர்களை உருவாக்கியுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளோம்.
நீட் தேவையில்லை என்பதற்காகவே இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளோம். தமிழக அரசு அளித்த பதில்களால், மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வால் பயிற்சி மையங்கள் பயன்பெறுகின்றன.
கிராமப்புற மாணவர்களை பாதிக்கிறது என்று பதில் அளித்துள்ளோம். தற்போது கவர்னரிடம் ஒரே ஒரு கோப்பு மட்டுமே நிலுவையில் உள்ளது. ஆன்லைன் ரம்மி விளம்பரங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
ஆன்லைன் ரம்மி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். தமிழகத்தில் உள்ள பழமையான சிறைகள் தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகின்றன,” என்றார்.