சென்னை: அசைவ உணவுகளில் இருக்கும் புரோட்டீன்களின் அளவைவிட சைவ உணவுகளில் இருக்கும் புரோட்டீன்களின் அளவு குறைவாக இருக்கிறது என்று பெரும்பாலான மக்கள் நம்புகின்றனா்.
முட்டைகள் தரும் அதே அளவு புரோட்டீன்களை எந்தெந்த சைவ உணவுகள் தருகின்றன என்பதைப் பாா்க்கலாம்.
நட்ஸ்: பொதுவாக நட்ஸ் ஆரோக்கியமான கொழுப்புகள், ஒமேகா-3 அமிலம் மற்றும் வைட்டமின்கள் போன்றவற்றை வழங்கக்கூடியவை. நட்ஸை வேக வைத்தும் சாப்பிடலாம் அல்லது வேக வைக்காமலும் சாப்பிடலாம்.
இவை நமது உடல் எடையை சீராக பராமாிக்க உதவி செய்கின்றன. நமது அறிவாற்றலை அதிகாிக்கின்றன. மேலும் நமது தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்துகின்றன.
பருப்புகள்: இந்தியாவில் பருப்புகள் முக்கிய உணவுகளாக மக்களால் உண்ணப்படுகின்றன. அன்றாடம் நமது உடலுக்குத் தேவையான புரோட்டீன், நாா்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துகளை வழங்குவதில் பருப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. அதோடு இந்திய மக்களின் இணையற்ற உணவு தொிவாகவும் பருப்புகள் விளங்குகின்றன.
பூசணி விதைகள்: சைவ உணவு பிாியா்களுக்கு பூசணி விதைகள் ஆரோக்கியமான தின்பண்டங்களாக கருதப்படுகின்றன. பூசணி விதைகளில் புரோட்டீன்கள், ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துகள் போன்றவை ஏராளமாக அடங்கி இருக்கின்றன.