சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் நிறுவன ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் வழங்கக் கோரியும், மேலும் 9 மணி நேரத்திற்கு மேல் நீளும் பணி நேரத்தைக் குறைக்கக் கோரியும் 90 சதவீத சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தை அந்நிறுவனமும், தமிழக அரசும் புறக்கணிப்பது நியாயமில்லை.
எனவே தமிழக அரசு உடனடியாக தமிழக அரசு சார்பில் குழு, சாம்சங் நிறுவனம் சார்பில் குழு, சாம்சங் தொழிற்சாலை, தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், மற்றும் தொழிலாளர்கள் தொடர்பாக தீபாவளி போனஸ் சம்மந்தமாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர்கள் சார்பில் குழு அமைக்க வேண்டும்.
இந்த பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.