தேவையான பொருட்கள்:
முள் கத்திரிக்காய் 4
உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 7 முதல் 8
வெங்காயம் – ஒன்று
தக்காளி – இரண்டு
கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி
புளி – கொட்டைப்பாக்கு அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு – 1 ஸ்பூன
உடைந்த உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். கத்தரிக்காயை அலம்பி துண்டுகளாக நறுக்கவும். இதேபோல் வெங்காயம், தக்காளியை நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு நிறம் மாறும் வரை வதக்கி, கத்தரி, தக்காளியைச் சேர்த்து வதக்கவும். வதக்கியை சிறிது நேரம் ஆற வைத்து, தேவையான அளவு உப்பு, புளி அளவு, கொத்தமல்லி தழை சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். கடாயில் கடுகு, உளுத்தம்பருப்பு, ஒரு சிட்டிகை கறிவேப்பிலை சேர்த்து, அரைத்த பருப்புடன் கலக்கவும். இது இட்லி, தோசை, அடை, பொங்கல் போன்றவற்றுக்கு ஒரு சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.