நியூயார்க்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி நடக்கும் அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்பும், தற்போதைய துணை ஜனாதிபதியும், ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஆனால், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் டிரம்ப், ‘தற்போதைய தேர்தலில் தோல்வி அடைந்தால், அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன். இருந்தாலும் அது நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.
இம்முறை வெற்றி பெறுவது உறுதி,’ என்றார். 2020 தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடனிடம் டிரம்ப் தோல்வியடைந்தார்.
அதற்கு முன், 2016 தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை டிரம்ப் தோற்கடித்தார்.