கடலூர்: கடலூர் மாநகராட்சி பள்ளியில் உள்ள வகுப்பறையை மேயர் இன்று சுத்தம் செய்தார். கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மேயர் சுந்தரி ராஜா இன்று (செப்டம்பர் 24) ஆய்வு செய்தார்.
அப்போது வகுப்பறைகளை பார்வையிட்ட அவர், வகுப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் அசுத்தமாகவும், புழுதியாகவும் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலக அதிகாரிகளை அழைத்து பள்ளியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.
மேலும் வகுப்பறைகளை ஏன் சுத்தம் செய்யவில்லை என பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து வகுப்பறைக்குள் சென்று துடைப்பம் வைத்து சுத்தம் செய்தார்.
மேலும் மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதனால் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.