கரூர்: திருப்பதி கோவிலில் விலங்குகள் கொழுப்பு தகராறு தொடர்பாக, கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், ஆஞ்சநேயருக்கு தேங்காய் உடைத்து முறையிடும் நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 28) நடந்தது.
கரூர் ரயில்வே குவார்ட்டர்ஸ் ஆஞ்சநேயர் கோவில் முன், இந்து முன்னணி கரூர் நகராட்சி தலைவர் கணேசன், நகர செயலாளர் காமேஸ்வரன், மாவட்ட பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் காலை 8 மணிக்கு ஆஞ்சநேயரிடம் முறையிட்டு 11 தேங்காய் உடைத்தார்.
இதில் நிர்வாகிகள், இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி 6 ரோடு, லாலாப்பேட்டை ஆஞ்சநேயர் கோவில்களிலும் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணராயபுரம், குளித்தலை கோவில்களில் இன்று மாலை தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.