பெங்களூரு: அமலாக்கத் துறையை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, ஆதர்ஷ் அளித்த புகாரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்ளிட்டோரின் தூண்டுதலின் பேரில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அமலாக்கத் துறை அதிகாரிகள் பணம் பறித்ததாகக் கூறப்பட்டது.
மேலும், நடவடிக்கை கோரி அவர் தாக்கல் செய்த மனுவை பதிவு செய்ய பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சி.ஐ.டி. விசாரணையை மாற்ற திட்டமிட்டுள்ள பெங்களூரு போலீசார் விரைவில் நீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்ய உள்ளனர்.