சென்னை: கடுக்காய், அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
கருவேப்பிலையை பொடி செய்து தினமும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். சிறுநீரகம் பழுதடைவதும் தடுக்கப்படும். காசினி கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கல் கரையும்.
கீழாநெல்லி இலைச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக பாதிப்பு சரியாகும். சாணாக்கி கீரையை கஷாயம் வைத்துக் குடித்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும். சோம்பு, பார்லி, மஞ்சள் மூன்றையும் ஒன்றாக சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித்தால் நல்லது.
டர்னிப் கீரையுடன் சீரகம், சோம்பு, சதகுப்பைக் கீரை, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயமாக்கி குடித்தால் சிறுநீரக நோய்த்தொற்று குணமாகும்.