பழநி: அறுபடை வீடுகளில் 3-வது வீடு பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இந்தக் கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது ராஜகோபுரத்தின் உச்சியின் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது. இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் கோபுரத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவில் நிர்வாகிகள் கூறுகையில், “ராஜகோபுரத்தின் உச்சியில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது உண்மைதான்.
அப்பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோபுரம் சேதமடைந்துள்ளதால், சிறிய அளவில் திருப்பணிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். கோபுரம் பழுதுபார்த்த பிறகு கும்பாபிஷேகம் மற்றும் கோபுரத்தை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கவலைப்பட வேண்டாம் என்றனர்.