நைரோபி: ஆப்பிரிக்க நாடான கென்யாவில் வரியை உயர்த்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு கென்யா மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் நடந்துள்ளன. செவ்வாய்க்கிழமை பிற்பகல், நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயன்றவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
சுமார் 31 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி உயர்வு மசோதாவைக் கண்டித்து நாடு முழுவதும் மக்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ‘7 டேஸ் ஆப் ரேஜ்’ என்ற போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
கென்யாவில் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய தேவையில்லாமல் எந்த இந்தியரும் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அனைவரும் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நிலைமை சீராகும் வரை போராட்டங்கள் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், மேலும் புதுப்பிப்புகளைப் பெற இந்திய தூதரகத்தின் இணையதளம் மற்றும் சமூக ஊடக இடுகைகளைப் பின்தொடருமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கென்யாவில் சுமார் இருபதாயிரம் இந்தியர்கள் இருப்பதாக தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.