வடகொரியா: அமைதிக்கு எதிராக செயல்படுகிறது… கொரிய தீபகற்ப பாதுகாப்புக்கும், அமைதிக்கும் எதிராகச் செயல்படுவது தென்கொரியாதான் என்று வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் குற்றம் சாட்டியுள்ளார்.
வட கொரியாவின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் எதிரான செயல்களில் ஈடுபடும் நாடுகள் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என அந்நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.
வடகொரிய ராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை பயிற்சி மையத்தை பார்வையிட்ட பிறகு, வீரர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
சமீப காலமாக, ராணுவத்தை வலுப்படுத்தவும், தற்காப்புக்காகவும் எனக் கூறி, ஏராளமான அணு ஆயுதங்களை வடகொரியா உள்நாட்டிலேயே தயாரித்து சேமித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.