புதுடெல்லி: இந்தியாவை ஒட்டியுள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்கட்டமைப்பு பணிகளை சீனா தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் நேற்று தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) விமானப்படை தினத்தை கொண்டாடும் வகையில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது கமாண்டர் ஏ.பி.சிங் கூறியதாவது:-
எல்ஓசி எனப்படும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் சீனா தனது உள்கட்டமைப்பை தீவிரமாக அதிகரித்து வருகிறது. அதற்கு இணையாக, இந்தியாவும் எல்லையில் உள்கட்டமைப்பை வேகமாக மேம்படுத்தி வருகிறது.
உலக நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒரு நாட்டுக்கு உள்நாட்டு ஆயுத அமைப்பு இருப்பது அவசியம்.
அதன்படி, 2047-ம் ஆண்டுக்குள் இந்திய விமானப்படையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை மட்டுமே சேவையில் சேர்ப்பதே எங்கள் இலக்கு. அதை நோக்கி மிக வேகமாக முன்னேறி வருகிறோம்.
ரஷ்யா இதுவரை S-400 ஏவுகணை அமைப்பின் மூன்று அலகுகளை வழங்கியுள்ளது. மீதமுள்ள இரண்டு அலகுகளை அடுத்த ஆண்டு வழங்க ரஷ்யா உறுதியளித்துள்ளது. இவ்வாறு ஏ.பி.சிங் கூறினார்.