காங்கோ : படகு கவிழ்ந்து 78 பேர் பலி… மத்திய ஆப்ரிக்க காங்கோ நாட்டில் ஏரியில் சென்ற படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 78 பேர் உயிரிழந்தனர்.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஏரியில் கவிழ்ந்ததில் 78 பேர் உயிரிழந்தனர்.
கோமா நகரிலிருந்து மினோவா நகருக்கு செல்லும் சாலை போராளி குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மக்கள் படகு மூலம் சென்றுவருகின்றனர்.
ஏரியில் எவ்வித சீற்றமும் ஏற்படாத நிலையில், 150 பேர் செல்ல வேண்டிய படகில் 278 பேர் ஏற்றப்பட்டதால், 2 தளங்களை கொண்ட படகு ஒரு பக்கமாக சாய்ந்து கவிழ்ந்துவிட்டதாக பயணிகள் தெரிவித்தனர்.
இதுவரை 40 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.