தஞ்சாவூர்: தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் அக்டோபர் 8 மற்றும் 22 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையத் தலைவர் கே. ஜெகதீசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்த பயிற்சி அக்டோபர் 8ஆம் தேதியும் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து அக்டோபர் 22 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் இல்லை. இதில் விருப்பமுள்ள விவசாயிகள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 04362-264665 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 5. 45 வரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.