சென்னை: கள்ளக்குறிச்சியை தொடர்ந்து, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய தென் மாநிலங்களிலும் மது, போதை ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இதுகுறித்து விரிவாக ஆலோசிக்க வரும் 10-ம் தேதி விசிக உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
மறைந்த தலைவர் ராஜாஜியின் நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
ஆனால் அவரது தடை வரவேற்கத்தக்கது. இந்தியாவில் மதுவிலக்கை முதன் முதலில் கொண்டு வந்து அமல்படுத்தியவர் ராஜாஜி என்பது மறுக்க முடியாத, மறுக்க முடியாத வரலாற்று உண்மை.