சென்னை: தக்காளி விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதியில் கிலோ ரூ.25 முதல் ரூ.30 வரை விற்கப்பட்ட தக்காளி, கடந்த சில நாட்களாக கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மொத்த சந்தையில் இந்த விலை என்றால், வெளிமார்க்கெட் மற்றும் சில்லரை கடைகளில் ரூ.60 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. தற்போது ஆந்திரா, கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வரத்து வெகுவாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரும் நாட்களில் தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனையாகும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.