தேவையானவை :
ரவை – ஒரு கப்
சேமியா – அரை கப்
சர்க்கரை – இரண்டரை கப்
நெய் – அரை கப்
முந்திரி – 10
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற தூள் – ஒரு சிட்டிகை
பால்கோவா – 2 டீஸ்பூன்
செய்முறை:
கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ரவை, சேமியாவை தனித்தனியாக வறுக்கவும். மீதமுள்ள நெய்யை காய வைத்து முந்திரி சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து சேமியா, ரவை சேர்க்கவும். பிறகு, 4 டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும், ரவை மற்றும் சேமியா கலவையில் ஊற்றி கொதிக்க விடவும். கலர் பொடி வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து அனைத்தும் ஒன்றாக வந்ததும் இறக்கி ஏலக்காய்த்தூள், பால்கோவா சேர்த்து கலந்து பரிமாறவும்.