புதுடில்லி: டெல்லியில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் விருது பெற்றனர்.
2022 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை, டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். சிறந்த தமிழ் படமாக தேர்வு செய்யப்பட்ட பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
சிறந்த நடிகருக்கான விருதை, காந்தாரா படத்திற்காக ரிஷப் ஷெட்டி பெற்றார். சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான விருது கேஜிஎப் 2 படத்திற்காக சகோதரர்களான அன்பறிவுக்கு வழங்கப்பட்டது.
பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் திரைத்துறை பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.