ஸ்டாக்ஹோம்: புரதத்தின் வடிவத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சிக்காக வேதியியலாளர்களான டேவிட் பாக்கர், டென்னிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் நினைவாக அறிவியல், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
பதக்கத்துடன், விருது பெறுபவர்களுக்கு ரூ.8.4 கோடி ரொக்கப் பரிசும் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், பணம் சமமாக பிரிக்கப்படும். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அக்டோபர் 7ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் பாக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோர் வேதியியலில் சாதனை படைத்ததற்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பாக்கர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகியோர் இங்கிலாந்தின் லண்டனில் உள்ள Google DeepMind இல் பணிபுரிகின்றனர்.
வேதியியலில், ஒரு புரதத்தின் முப்பரிமாண வடிவத்தை அறிந்துகொள்வதன் மூலம், அதன் செயல்பாடு, மற்ற மூலக்கூறுகளுடன் அது எவ்வாறு தொடர்பு கொள்கிறது மற்றும் புரதக் கட்டமைப்பிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட மருந்துகள் ஆகியவற்றை தீர்மானிக்க முடியும். ஆனால், இதை கணிப்பது மிகவும் கடினம்.
இந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளான ஹசாபிஸ் மற்றும் ஜம்பர் ஆகிய இருவர் அமினோ அமிலங்களின் வரிசைக்கும் புரத அமைப்புக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடித்தனர். மேலும், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தி, இரண்டு பில்லியனுக்கும் அதிகமான புரதங்களின் முப்பரிமாண அமைப்பை அவர்கள் கிட்டத்தட்ட அடையாளம் கண்டுள்ளனர்.
இதேபோல், டேவிட் பாக்கர் என்ற மற்றொரு விஞ்ஞானி, பல்வேறு வடிவங்களில் கணினியில் புரதங்களை உருவாக்கினார். இந்த புரதங்கள் மருந்துகள், தடுப்பூசிகள், நானோ பொருட்கள் மற்றும் சிறிய சென்சார்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.