புதுடெல்லி: அரியானா மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பா.ஜ.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஹரியானா தேர்தலில் எதிர்பாராத தோல்வி குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் உயர்மட்ட தலைவர்கள் அடங்கிய கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தேர்தல் பார்வையாளர்கள் அசோக் கெலாட், அஜய்மக்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகில இந்திய காங்கிரஸ் ஹரியானா பொறுப்பாளர் தீபக் பபேரியா ஆன்லைனில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மகான் கூறியதாவது:- ஹரியானா தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்தோம். கருத்துக்கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக இருந்தாலும், தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை.
இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அது குறித்தும், அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மக்கான் கூறினார்.