லெபனானில் ஐ.நா., படைகள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.
இஸ்ரேல் ராணுவமும் அதற்கு பதிலாக தாக்குதல் நடத்தி வருகிறது. தெற்கு லெபனானில் உள்ள ஐ.நா., இடைக்காலப் படை தலைமையகம் மற்றும் அமைதிப்படை நிலைகளுக்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சில அமைதிப்படை வீரர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, நமது வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், லெபனானில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருவதை குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும், ஐ.நா., அமைப்பு மற்றும் அதன் இடங்களை மதிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா., அமைதிப்படையினர் மற்றும் அவர்களின் பணியின் புனிதத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.