உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி பெயரில் சாலையோர தற்காலிக கடைகளுக்கு ரூ.30-க்கான ரசீது கொடுத்து விட்டு ரூ.200 வரை வசூல் செய்யப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சாலையோரம் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு சுங்கம் வசூலிப்பதற்கு ஒப்பந்தம் விடப்படாத நிலையிலும் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
நகராட்சி சார்பில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி 30 ரூபாய்க்கான ரசீதை கொடுத்து விட்டு 50 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.