சென்னை: பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலாளர் மணீஷ் ஆர். ஜோஷி இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி; நடப்பு கல்வியாண்டில் (2024-25) பிப்ரவரி மாணவர் சேர்க்கைக்கான தொலைதூரப் படிப்புகள் நடந்து வருகின்றன.
அதன்படி, யுஜிசி விதிமுறைகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள் தொலைதூர மற்றும் ஆன்லைன் படிப்புகளை கற்பிப்பதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அதன்படி, தகுதியான கல்வி நிறுவனங்கள் /deb.ugc.ac.in/ என்ற இணையதளம் மூலம் அக்டோபர் 31-ம் தேதிக்குள் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.
அதன்பிறகு, கல்வி நிறுவனங்கள் விண்ணப்ப நகலை உரிய ஆவணங்களுடன் நவம்பர் 15-ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள யுஜிசி தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். பின்னர், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும்.
தொடர்புடைய விதிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேலே உள்ள இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.