காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே நாய் கடித்ததில் 5 வயது சிறுவன் பலத்த காயமடைந்தான். காஞ்சிபுரம் அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரின் 5 வயது மகன் நிர்மல்ராஜ்.
வீட்டின் பின்புறம் உள்ள வயலில் விளையாடிக் கொண்டிருந்த போது தெருநாய் ஒன்று சிறுவனை கடிக்க முயன்றது.
சில நொடிகளில் தெருநாய் சிறுவனின் வாயைக் கடித்தது. இதனால் சிறுவனின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது.
சிறுவன் நிர்மல்ராஜின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த நாயிடமிருந்து பாலாஜி சிறுவனை மீட்டபோது பாலாஜியை நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக சிறுவனை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தற்போது முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.