சென்னை: சென்னை சூளைமேடு சங்கரியார் காலனியை சேர்ந்தவர் குமரவேல் (49). மும்பையை தலைமையிடமாகக் கொண்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆப்பிள் ஐபோன்கள் போன்ற போலி பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மற்றும் கடைகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குமரவேலில் பணிபுரியும் நிறுவனத்திற்கு ஆப்பிள் ஐபோன் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வகையில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆப்பிள் ஐபோன் போன்ற போலி பொருட்களை தயாரித்து விற்பனை செய்பவர்களை குமரவேல் கண்டுபிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்து வருகிறார். இந்நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் ஆப்பிள் ஐபோன்கள் போன்ற போலி பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குமரவேலுக்கு தெரிய வந்தது. இதுபற்றி அவர் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.