திருக்கழுக்குன்றம்: திருப்போரூரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கந்தசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருப்போரூர் மட்டுமின்றி தண்டலம், பொன்மார் மற்றும் பல இடங்களில் பல ஏக்கர் நிலம் உள்ளது.
கோயிலுக்குச் சொந்தமான இந்த நிலங்கள் மற்றும் இடங்களை கோயில் நிர்வாகம் சார்பில் தகுதியான ஏலதாரர்களுக்கு குத்தகை அடிப்படையில் விடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குத்தகைக்கான (திருப்போரூர் நிலம்) ஏலம் நேற்று கோயில் செயல் அலுவலர் குமரவேல் தலைமையில் ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 43 ஏக்கர் நிலத்தை 18 பேர் ஏலம் எடுத்து ஓராண்டுக்கு ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் செலுத்தி ஏலம் எடுத்தனர்.