ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வியில் சேருகிறார்கள். மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்கு செல்வதால், சில மாணவர்கள் சில பாடங்களை கற்க முடியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, சில மாணவர்கள் கணிதத்தில் உள்ள ஃபார்முலாக்களை மனப்பாடம் செய்வதிலும், அறிவியலில் ஆராய்ச்சி செய்வதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.
அந்த பாடங்களில் தேர்ச்சி பெறாததால், அடுத்த வகுப்புக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. 100க்கு 35 மதிப்பெண் கூட எடுக்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள், இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனர். மாணவர்கள் படிப்பைத் தொடராமல் கைவிடலாம். இதனை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
மாணவர்கள் இடைநிறுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு, கணிதம் மற்றும் அறிவியலில் 20 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற அனுமதிக்கும் புதிய முடிவை அறிவித்துள்ளது. இதன் மூலம், 10ம் வகுப்பில், இவ்விரு பாடங்களிலும், 20 மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், உயர்கல்வியில், கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பாடங்களை படிக்க முடியாது.
100க்கு 20 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கலை மற்றும் வணிகவியல் பாடங்களை தேர்வு செய்யலாம் என்றும் அரசு கூறியுள்ளது. மகாராஷ்டிர மாநில உயர் மற்றும் இடைநிலைக் கல்வி வாரியத் தலைவர் சரத் கோசாவி கூறுகையில், இந்த மதிப்பெண் குறைப்பு திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படாது, புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும்போது கொண்டு வரப்படும்.