மூடா ஊழல் வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி 4 மணி நேரத்துக்கும் மேலாக லோக் ஆயுக்தா போலீசாரின் விசாரணைக்கு ஆஜரானார். பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து 14 வீடுகளை வாங்கியதாக சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, லோக் ஆயுக்தா போலீஸார், சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜூன், நிலத்தை விற்ற தேவராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில், இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பார்வதிக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இது ரகசியமாக வைக்கப்பட்டது. இதையடுத்து பார்வதி சத்தமில்லாமல் மைசூரு மூடா அலுவலகத்திற்கு வந்தார்.
அவரிடம், லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் உள்ளிட்ட அதிகாரிகள், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். லோக் ஆயுக்தா அலுவலக ஊழியர்களுக்கு கூட விசாரணை தெரியவில்லை.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சித்தராமையாவிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று லோக்ஆயுக்தா வட்டாரங்கள் தெரிவித்தன.