சென்னை: தமிழகத்தில் பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளை தரம் உயர்த்துவது தொடர்பான சட்டத் திருத்தம் நாளை சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ’தேன்கனிகோட்டை மாவட்டம் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படுமா’ என இந்திய கம்யூனிஸ்ட் சட்டப்பேரவைத் தலைவர் டி.ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “அதிக மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் நகராட்சிகளை பேரூராட்சிகளாகவும், நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கான சட்டத்திருத்தம் ஜூன் 29-ம் தேதி (நாளை) சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட உள்ளது. வருவாய் மற்றும் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், அவற்றை மேம்படுத்த முடியும்,” என்றார்.