சென்னை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஊக்கமும், உதவியும் வழங்கப்படும் என செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதுகுறித்து செயல்தலைவர் ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
ஜூன் 27 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தினம். திராவிட மாதிரி அரசு அமைந்த பிறகு, அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம், பட்டியல் சாதிகள், பழங்குடியினர் தொழில் முனைவோர் நிதி, சந்தைப்படுத்தல் வசதிகள், தமிழ்நாடு தென்னை நார்க் கொள்கை 2024, தமிழ்நாடு புதுமைக் கொள்கை 2023 போன்ற பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் பெரும் பங்காற்ற தேவையான ஊக்கத்தையும் உதவிகளையும் தொடர்ந்து வழங்குவோம். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.