சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு சலுகை வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டன் கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.4000 வழங்கப்படும் என சட்டசபை பொதுத் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.
2023-24-ம் ஆண்டில் கரும்பு வழங்கிய அனைத்து விவசாயிகளுக்கும் டன் ஒன்றுக்கு ரூ.215/ சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வேளாண் அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இதை உறுதி செய்து, தீபாவளிக்கு முன், கரும்பு விவசாயிகள் அனைவருக்கும் தொகை வழங்கப்படும் என, அரசு செய்திக் குறிப்பையும் வெளியிட்டுள்ளது.
ஆனால், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படாததால், தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஊக்கத்தொகை கிடைக்காத கரும்பு விவசாயிகள், இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாட முடியாமல் கடும் அதிருப்தியில் உள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்துகிறேன்.