புதுடில்லி: வடமாநிலப் பகுதிகளில் வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு ஏற்பட்டு புகைமூட்டம் நிலவுகிறது.
டெல்லி, மும்பை, ஆக்ரா உள்ளிட்ட வட மாநிலப் பகுதிகளில் புகை மூட்டத்துடன் கடுமையான காற்று மாசு நிலவுகிறது. டெல்லியின் பல இடங்களில் மிகவும் மோசமான அளவுக்கு காற்று மாசு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பலருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லிக்கு அருகே,உள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு அதிகரித்துள்ளது.
ஆக்ராவில் நிலவும் கடும் புகைமூட்டம் காரணமாக, சுற்றுலாத் தலமான தாஜ் மகாலை தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்