பெலகேரி இரும்புத் தாது வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் சைல் உள்பட 7 பேர் குற்றவாளிகள். 2010ல், சட்டவிரோத சுரங்கங்களில் இருந்து பெறப்பட்ட இரும்பு தாதுவை, இவரது நிறுவனம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததை, 2010ல், சி.பி.ஐ., உறுதி செய்தது.
இதையடுத்து, ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 44 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நகல் இன்னும் அதிகாரப்பூர்வமாக சபாநாயகர் அலுவலகத்துக்கு வராததால், எம்எல்ஏ சதீஷ் சைல் பதவி நீக்கம் குறித்த முடிவு இன்னும் நிலுவையில் உள்ளது.
தீர்ப்பு நகல் அடிப்படையில் சபாநாயகர் அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். இதன் பிறகு கார்வார் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.