சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டத்தை விரைந்து அமல்படுத்த மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதி திரௌபதி முர்முவின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதைத்தொடர்ந்து, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வினய் சக்சேனா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நித்யானந்த் ராய் மற்றும் பலர் சர்தார் வல்லபாய் படேல் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். பின்னர் முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து நடந்த பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இரு சக்கர வாகனங்களில் ஸ்டண்ட் செய்வது முதல் வான்வழிப் போரில் ஸ்டண்ட் செய்வது வரை வீரர்கள் பல்வேறு விதங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் சில சக்திகள் நாட்டை பலவீனப்படுத்தவும், சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்தவும் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் நோக்கில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மனதில் இந்தியா என்ற தவறான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய அவர், ஜனநாயகம், அரசியல் சாசனம் குறித்து பேசும் சிலர் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாக மறைமுகமாக விமர்சித்தார். சாதியின் அடிப்படை.