சென்னை: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அந்தஸ்தில் அக்கறை கொண்ட தலைவர்களில் ஒருவரான சந்திரபாபு நாயுடு, ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டி லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க முயற்சிக்கிறார்.
எனவே தமிழகத்தின் வட மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய அணையை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கைவிட வேண்டும்.