தேவையானவை
மிளகு சீரகம் – 1 டீஸ்பூன்
பருப்பு கீரை – 1 கட்டு
பூண்டு – 10 பல்
வெங்காயம் – 1
கொத்தமல்லி, புதினா – ஒரு கைப்பிடி
இஞ்சி – 1 சிறிய துண்டு
தக்காளி – 2
உப்பு, எண்ணெய், மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப.
செய்முறை:
கீரையை சுத்தம் செய்து வடிகட்டி, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின் கீரை சாறு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.