‘ஓ மை காட்’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக ‘டிராகன்’ படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் தயாரிப்பாளர். பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
தற்போது இந்த படத்தில் 3 இயக்குனர்கள் இணைந்துள்ளனர். ‘மயில்வாகனன்’ கேரக்டரில் மிஷ்கினும், ‘வாலே குமார்’ கேரக்டரில் கவுதம் வாசுதேவ் மேனனும், ‘பரசுராம்’ கேரக்டரில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் நடித்துள்ளனர். இதனை படக்குழு அறிவித்துள்ளது