திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பாசனத்திற்காக குதிரையாறு மற்றும் பாலாறு பொருந்தலாறு அணைகளிலிருந்து இன்று (நவம்பர் 15, 2024) தண்ணீர் திறக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த தண்ணீர் திறப்பின் மூலம், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பழனி மற்றும் மடத்துக்குளம் வட்டங்களின் 2863.86 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் கிடைக்கும். இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த பாசனத் தண்ணீர், 120 நாட்களுக்கு, அதாவது 15.11.2024 முதல் 15.03.2025 வரை வெளியிடப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த தண்ணீர் திறப்பு மூலம், 7012 ஏக்கர் பழைய பாசன நிலங்கள், பழனி வட்டத்தில் உள்ள புதச்சு, பாலசமுத்திரம் கிராமங்களிலும் பாசனம் பெறும்.