ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டுக் கூடத்துக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி கூறும்போது, ‘‘பொங்கலுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி, சேலை பணிகள் நடப்பு லோக்சபா தேர்தல் காரணமாக தாமதமானது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனைத்து வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி 15-ம் தேதிக்குள் அனைவருக்கும் இலவச வேட்டி சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் வேட்டி சேலை வழங்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. ,” என்றார்.
இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, ஆற்காடு சட்டப் பேரவை உறுப்பினர் ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.