திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாலை 5 மணிக்கு ஒரு மணி நேரம் முன்னதாக மாலை 4 மணிக்கு திறக்கப்பட உள்ளது. மண்டல பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
இரவு 7 மணிக்கு சபரிமலை, மலையபுரம் கோவில்களின் புதிய மேலசாந்திகள் அருண்குமார் நம்பூதிரி, வாசுதேவன் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டு, நாளை அதிகாலை 3 மணிக்கு மண்டல கால பூஜைகள் நடக்கிறது.
இன்று நடை திறப்பதற்கு முன்னதாகவே 30,000 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், மாலை 5 மணிக்கு ஒரு மணி நேரம் முன்னதாக மாலை 4 மணிக்கு திறக்கப்படும். பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல முன்பதிவு செய்த பக்தர்கள் மதியம் 1 மணிக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்றும், மதியம் 2 மணி வரை மட்டுமே நடை அடைக்கப்படும் என்றும் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது.