தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2
பச்சை பட்டாணி – 1 கப்
தக்காளி – 1
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 3 பல்
கொத்தமல்லி தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
புளி சாறு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
இலவங்கப்பட்டை – 1 துண்டு
செய்முறை:
1 கப் பச்சை பட்டாணியை 5 முதல் 7 மணி நேரம் நன்றாக ஊற வைக்கவும். பச்சைப் பட்டாணி ஊறியதும் உருளைக்கிழங்கை நறுக்கி இரண்டையும் குக்கரில் போட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை வேகவிடவும். ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் சிறிது இலவங்கப்பட்டை, வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். இந்தக் கலவை நன்றாக வெந்ததும் தனித்தனியாக எடுத்து ஆறவைத்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைக்கவும். பிறகு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, வெங்காயம் தக்காளி விழுது சேர்த்து வதக்கி, பின் உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், புளி சாறு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து அரை கப் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும். 3 முதல் 5 நிமிடம் கொதிக்க விடவும், பின் அதனுடன் உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து 7 – 8 நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்போது மசித்த உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை தனித்தனியாக சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். நன்றாக வதங்கிய பின், பச்சை வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், சுவையான சாலையோர மசாலா சுண்டல் ரெடி!