புதுடெல்லி: இந்தியாவின் டிஆர்டிஓ நீண்ட தூரம் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஒடிசாவில் உள்ள சந்திப்பூரில் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இது வரலாற்றுச் சாதனை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
DRTO ராணுவ வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு நீண்ட தூர ஏவுகணைகளை வடிவமைத்து சோதனை செய்து வருகிறது. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் சோதனை நேற்று (நவம்பர் 17) ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓ மற்றும் ராணுவத்தின் மூத்த விஞ்ஞானிகள் முன்னிலையில் விமான சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் டிஆர்டிஓ, நீண்ட தூரம் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை நேற்று ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஏவுதளத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்தது.
ஏவுகணையை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது ஒரு வரலாற்று தருணம். நமது ஆயுதப் படைகள் மற்றும் தொழில்துறையினருக்கு வாழ்த்துகள்.” என்றார்.