அவனியாபுரம்: தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பியுள்ளோம். தமிழகம் போன்ற பிற மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
மோடிக்கு ஜனநாயக உணர்வு இருந்தால் அதை செய்வார் என்று நினைக்கிறேன். அதிமுகவை பொறுத்தவரை சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கலாம் என சபாநாயகர் கூறினார்.
ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. விவாதிப்பதில் அக்கறை இல்லாததால், சட்டசபையில் நாடகமாடுகின்றனர். இதன் மூலம் தி.மு.க.வை அசைக்க முடியும் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், என்ன செய்தாலும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு கூறினார்.